மத்திய அரசு
மூலமாக பெண்களுக்கு இலவசமாக
தையல் இயந்திரம்
பெண்கள்
சுயதொழில் செய்து வருமானம்
ஈட்டுவதற்காக, மத்திய
அரசு இலவச தையல்
இயந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் 50,000க்கும் மேற்பட்ட
பெண்களுக்கு இலவச தையல்
இயந்திரங்களை வழங்க
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் 20 வயது
முதல் 40 வரையிலான பெண்கள்
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இலவசமாக தையல் இயந்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
கிராமபுற
பெண்கள் நகர்ப்புறப் பெண்கள்
இரு தரப்பினரும் இந்தத்
திட்டத்தின் கீழ் இலவச
தையல் இயந்திரம் பெற
முடியும்.
பிரதமர் இலவச தையல் இயந்திரம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
ஆதார்
கார்டு, பிறப்புச் சான்றிதழ்,
வருமான சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான
சான்றிதழ், விதவையாக இருந்தால்
அதற்கான சான்று, மொபைல்
எண், பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ போன்றவற்றை இணைத்து
அருகில் உள்ள பொது
சேவை மையத்தை அணுகி
விண்ணப்பித்து தையல்
இயந்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.