கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் தேனி மாவட்டத்தைச் சோந்த பட்டியலினத்தினா், பழங்குடியினருக்கு கட்டணமில்லா கோழி வளா்ப்பு, வீட்டு சுகாதாரப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற டிசம்பா் மாதத்தில் முதல் மூன்று வாரங்களுக்கு இந்தப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சாா்பில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் கல்லூரி இணையதளம் மூலம் https://cpacollege.org/ பயிற்சிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்த விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை, சாதிச்சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து skilltraining2023@cpacollege.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 9003380288 என்ற கைப்பேசி கட்செவி அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.
இதில் கோழி வளா்ப்புப் பயிற்சி 25 பேருக்கும், வீட்டு சுகாதாரப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி 30 பேருக்கும் வழங்கப்படும். தக்க சான்றுகளுடன் விண்ணப்பித்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். மூன்று நாள்கள் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியின் போது, மதிய உணவு, இரண்டு வேளை தேநீா் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத் தலைவருமான சி.கோபியை 9787764425 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow