இலவச ஓவிய
பயிற்சி முகாம்
மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் கூறியிருப்பது:
கலை
பண்பாட்டுத்துறையின்கீழ் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றம்
சார்பில் உலக ஓவியர்
தினத்தை முன்னிட்டு 5 முதல்
16 வயதிற்கு உட்பட்ட மாணவ,
மாணவிகளுக்கு ஓவிய
பயிற்சி பட்டறை நடத்தவும்,
அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவில் கலைக்காட்சி நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓவிய
பயிற்சி முகாம்களில் மரபு
சார்ந்த ஓவியங்கள், துணி
ஓவியங்கள்,பேப்பர் ஓவியங்கள்,
பானை, மரம் ஓவியங்கள்,
வாட்டர் கலர், பென்சில்
ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்கள்
இடம்பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
ராமநாதபுரம் டி.டி.விநாயகர்
தொடக்கப்
பள்ளியில் மே 19 காலை
9:00 முதல் மாலை 4:00 மணி
வரை இலவச ஓவிய
பயிற்சி முகாம் நடக்கிறது.
மாலையில் மாணவர்கள் வரைந்த
ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டு அவற்றில்
தேர்வு செய்யப்படும் ஓவியங்கள்
சென்னையில் நடைபெறும் மாநில
அளவிலான நிறைவு விழாவில்
காட்சிப்படுத்தப்படும்.
எனவே,
மே 19ல் 5 முதல்
16 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு வரைபட அட்டை
வழங்கப்படும். வரைபட
பொருட்கள், மதிய உணவை
அவர்களே கொண்டுவர வேண்டும்.
பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்வழங்கப்படும். 98425 67308 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


