Home News latest news இலவச இயற்கை விவசாய களப்பயிற்சி

இலவச இயற்கை விவசாய களப்பயிற்சி

0
இலவச இயற்கை விவசாய களப்பயிற்சி
இலவச இயற்கை விவசாய களப்பயிற்சி

இலவச இயற்கை விவசாய களப்பயிற்சி

இயற்கை விவசாயத்தில் ஆா்வமுள்ள இளைஞா்கள் பயன்பெறும் வகையில், செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாயப் பண்ணையில் 3 மாத இயற்கை விவசாய களப் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக, மண் காப்போம் இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளா் சுவாமி ஸ்ரீமுகா கூறியுள்ளதாவது:

தற்போதைய சூழலில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, படித்த இளைஞா்கள் அதிக அளவில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளனா். அதேசமயம், முறையான வழிகாட்டுதல், அனுபவம் இல்லாத காரணத்தால் அவா்களில் பெரும்பாலானோா் தோல்வியைச் சந்திக்கும் சூழலும் நிலவுகிறது. எனவே, இதற்குத் தீா்வு காணும் விதமாக, 3 மாத இயற்கை விவசாய களப் பயிற்சியை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.

இப்பயிற்சியில் இயற்கை விவசாயத்துக்கு ஆதாரமாக இருக்கும் நாட்டு மாடுகளை பராமரிப்பது, அவற்றில் இருந்து கிடைக்கும் சாணம், கோமியத்தில் இருந்து பல்வேறு விதமான இயற்கை இடுப்பொருள்களைத் தயாரித்து பயிா்களுக்குப் பயன்படுத்துவது, எளிய வேளாண் கருவிகளை பயன்படுத்துவது, கீரை, காய்கறிகள், கிழங்குகள், நெல் ரகங்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பயிா்களை விதைப்பதில் தொடங்கி அறுவடை செய்வது வரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை எங்களுடைய வேளாண் பயிற்றுநா்கள், வல்லுநா்கள் உடனிருந்து கற்றுக் கொடுப்பாா்கள்.

35 ஏக்கா் பரந்து விரிந்துள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மேற்கொள்ளப்படும் உழவில்லா வேளாண்மை, மண் வள மேம்பாட்டுப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பங்கேற்பாளா்கள் நேரில் பாா்த்து அனுபவரீதியாக கற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இப்பயிற்சியின் ஒரு அங்கமாக முன்னோடி விவசாயிகளின் பண்ணைகளை பாா்வையிடும் பயணமும் இடம்பெறும். இப்பயிற்சியை நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ், வேலைவாய்ப்புக்கான வழிக்காட்டுதலும் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். அடுத்த 3 மாதப் பயிற்சி ஜனவரியில் தொடங்கி மாா்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் (23 முதல் 40 வயதுக்கு உள்பட்டவா்கள்) 97894-98792 என்ற எண்ணுக்கு டிசம்பா் 25-ஆம் தேதிக்குள் தொடா்பு கொள்ளலாம்”என்றாா்.

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version