தமிழக அரசு
பள்ளி மாணவர்களுக்கு இலவச
நீட் தேர்வு பயிற்சி
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நீட்
நுழைவுத்தேர்வு அவசியமானதாகும். இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை தமிழக
அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத
சூழ்நிலை இருந்து வருகிறது.
இதனால் 12-ஆம் வகுப்பு
அரசு பாடத்திட்டங்களை தேசிய
அளவுக்கு உயர்த்துவதிலும் சிக்கல்கள் நீண்டு வருகிறது. முன்னதாக
நீட் தேர்வினால் தமிழகத்தில் பல அரசியல் குழப்பங்கள் கூட ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏழை மாணவர்களுக்கு நீட்
தேர்வு வெறும் கனவாக
இருக்கக்கூடாது என
கருதிய தமிழக அரசு
அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட்
தேர்வுக்கான இலவச பயிற்சிகளை அளித்து வருகிறது. கடந்த
ஆண்டு கொரோனா தொற்றால்
இந்த இலவச பயிற்சிகள் நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்டு
தமிழக அரசு, இ–பாக்ஸ்
என்ற அமைப்புடன் சேர்ந்து
நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் வழி பயிற்சி
வகுப்புகளை நடத்த திட்டமிட்டு வருகின்றது.
அதன்படி
இந்த பயிற்சி வகுப்புகளில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு இந்த நிறுவனம் சார்பில்
ஒரு மாத நேரடி
இலவச பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆண்டிற்கான 12ஆம்
வகுப்பு பொதுத்தேர்வுகள் மே
மாதம் 3 முதல் 21 வரை
நடைபெறவுள்ளன. தேர்வுகள்
முடிந்ததும் மே மாத
இறுதியில் பயிற்சி வகுப்புகள் துவங்கி ஜூன் மாதம்
வரையும் ஆன்லைன் பயிற்சி
வகுப்புகள் நடக்கவுள்ளன. நீட்
தேர்வு பயிற்சிகளில் சிறப்பாக
பங்குபெறும் மாணவர்களுக்கு ஆன்லைன்
வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு சிறப்பு நேரடி வகுப்புகளுக்காக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.