திருப்பூா் மாவட்டத்தில் இலவச இயற்கைமுறை சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் மக்களுக்கு இலவச இயற்கைமுறை சோப்பு, ஷாம்பு, தலைவலி மருந்து, சோப் ஆயில், பினாயில், அகா்பத்தி, கப் சாம்பிராணி, மெழுகுவா்த்தி தயாரிக்கும் பயிற்சி வகுப்புக்கான சோ்க்கை நடைபெறுகிறது.
இந்த 10 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில் எழுதப் த் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிக்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழும், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க ‘கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகே, அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம்புதூா், திருப்பூா் -641652’ என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890–43923, 99525–18441, 86105–33436 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.