பெண் குழந்தைகளுக்கு இலவச தற்காப்பு கலை
பயிற்சி
காவல்
துறை சார்பில் பெண்கள்
மற்றும் பெண் குழந்தைகளுக்கு இலவச தற்காப்பு கலை
பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.
சர்வதேச
மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி போலீஸ் சார்பில்
பெண்கள் மற்றும் பெண்
குழந்தைகளுக்கு, தற்காப்பு
கலை பயிற்சியான, சிலம்பம்
மற்றும் கராத்தே இலவச
பயிற்சி அளிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
கோரிமேடு
போலீஸ் பயிற்சி மைதானத்தில் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் கராத்தே பயிற்சியும், செவ்வாய்
கிழமை மட்டும் சிலம்பம்
பயிற்சி நடக்கிறது.கராத்தே
பயிற்சி நேற்று முன்தினமும், சிலம்பம் பயிற்சி நேற்று
மாலை துவங்கியது.
மேலும் விபரங்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் 8124730030, காவலர் நாதமணி 9787464317 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்