TAMIL MIXER
EDUCATION.ன்
மத்திய
அரசு
செய்திகள்
மூலிகைப் பொருள் தயாரிக்க இலவச பயிற்சி – மதுரை
மதுரை புதூர் தொழிற்பேட்டையில்
உள்ள
எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் மூலிகைப்பொருட்கள்
தயாரிப்பு
குறித்து
6 வார
கால
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
மதுரை திருமங்கலம் குன்னனம்பட்டியில்
கோகிலா
சித்த
மருத்துவமனையில்
ஜன.
3 ல்
பயிற்சி
துவங்குகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும் பயிற்சியில், பத்தாவது படித்த 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு
முன்னுரிமை
உண்டு.
மூலிகை பொருட்கள் பற்றிய அறிமுகம், மருத்துவ குணம், மூலிகைகளை கண்டுபிடித்தல்,
சேமித்து
பாதுகாத்தல்,
பண்ணை
அமைத்தல்,
உற்பத்தி,
சந்தைப்படுத்துதல்
வரை
விளக்கப்படும்.
மூலிகை
பண்ணைக்கு
நேரடியாக
அழைத்துச்
செல்லப்படுவர்.
மத்திய அரசின் சான்றிதழ் உண்டு. வங்கி கடன்பெற வழிகாட்டப்படும்.கல்வி, ஆதார், ஜாதிச்சான்று
நகல்,
ஒரு
போட்டோவுடன்
மதுரை
மாட்டுத்தாவணி
காய்கறி
மார்கெட்
எதிரே
உள்ள
எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையத்தில் முன்பதிவு செய்யலாம்.
82200 06872ல் கூடுதல் விவரங்களை பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


