கனரா வங்கி
ஊரக சுய வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச சணல் பை
தயாரிப்பு பயிற்சி
தேனியில்
கனரா வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு மையம்
சார்பில் இலவசமாக சணல்
பை தயாரிப்பு பயிற்சி
வகுப்பு நடைபெற உள்ளது.
தேனி
வட்டாட்சியா் அலுவலகம்
அருகே கனரா வங்கி
ஊரக சுய வேலை
வாய்ப்பு மையத்தில் ஏப்.6ம்
தேதி தொடங்கி 16 நாட்கள்
வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் கிராமப்புற ஏழைப்
பெண்கள் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியின் நிறைவில் சான்றிதழ்
மற்றும் தொழில் கடன்
ஆலோசனை வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள்
தங்களது ஆதார் அட்டை,
கடவுச்சீட்டு அளவு
புகைப்படம் ஆகியவற்றுடன் கனரா
வங்கி ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
மையத்தில் நேரில் சென்று
விண்ணப்பிக்கலாம். பயிற்சி
குறித்த விவரங்களை 95003 14193 என்ற
கைப்பேசி எண்ணில் தொடா்பு
கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


