📢 போட்டித் தேர்வர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு! – 5 நாட்கள் Free Coaching Classes
ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளுக்காக போட்டித் தேர்வுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கின்றனர். அதிகமான மதிப்பெண்களைப் பெறுவதற்காக தீவிரமான தயாரிப்பு தேவையாகும். ஆனால், அனைவராலும் தனியார் coaching centres-ல் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாது.
இதற்கான தீர்வாக, தமிழக அரசு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. இந்த வகுப்புகளின் மூலம் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் பயனடைந்து வருகின்றனர்.
🎓 எந்தெந்த தேர்வுகளுக்கான பயிற்சி?
தமிழக அரசு அறிவித்த இலவச வகுப்புகள் கீழ்காணும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படுத்தலாம்:
- TNPSC (தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்)
- TNUSRB (சீருடை பணியாளர் தேர்வு வாரியம்)
- TRB / TET (ஆசிரியர் தேர்வு வாரியம்)
- SSC / UPSC அடிப்படை பாடங்கள்
- RRB (இரயில்வே தேர்வு வாரியம்)
- IBPS (வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்)
2026 ஆம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை வெளியானதை முன்னிட்டு, மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🗓 எங்கு? எப்போது? (Class Schedule)
📅 தேதி:
08.12.2025 – 12.12.2025 (மொத்தம் 5 நாட்கள்)
⏰ நேரம்:
- காலை ஒளிபரப்பு: 7.00 AM – 9.00 AM
- மறு ஒளிபரப்பு: 7.00 PM – 9.00 PM
📺 எங்கு பார்க்கலாம்?
- கல்வி தொலைக்காட்சி (Kalvi TV)
- TN Career Services Employment – YouTube Channel
- மேலும, ஒவ்வொரு பாடத்திற்குமான study materials
👉 https://tamilnaducareerservices.tn.gov.in/ எனும் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
🎯 ஏன் இந்த இலவச பயிற்சியை பயன்படுத்த வேண்டும்?
- கட்டணம் செலுத்த தேவையில்லை
- வீட்டிலிருந்தே நேரடியாகப் படிக்கலாம்
- TNPSC, TRB, RRB, IBPS போன்ற முக்கிய தேர்வுகளின் syllabus அனைத்தையும் covers
- தேர்வுக்கு தேவையான Current Affairs, Aptitude, GS, Subject Topics எல்லாம் simplifiedஆ கற்பிக்கப்படும்
- அரசு வழங்கும் authentic coaching & materials
✨ மாணவர்களுக்கு மிகப் பெரிய நன்மை!
2026 TNPSC தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளதாலும், போலீஸ், ரயில்வே, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிவிப்புகள் வரவுள்ளதால், இந்த free coaching week தேர்வர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
ஒரு ரூபாயும் செலவு செய்யாமல், வீட்டிலிருந்தே தேர்வு தயாரிப்பை ஆரம்பிக்க வாய்ப்பு!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

