தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தின் அறிக்கையில் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடத்துக்கான உடற்தகுதி தேர்வு நவம்பா் 7 -ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து இளைஞா்களும் உதவி ஆய்வாளா் பணிக்கான உடற்தகுதி தேர்வினை எதிா்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த உடற்கல்வி தேர்வுக்கு தயாராகும் இளைஞா்கள் இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


