Home Blog அரசு சார்பில் இலவச தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும்

அரசு சார்பில் இலவச தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும்

0

Free entrepreneurship training will be provided on behalf of the government

அரசு சார்பில்
இலவச தொழில் முனைவோர்
பயிற்சி வழங்கப்படும்

மாற்றுத்திறனாளிகளை தொழில் முனைவோராக
முன் வருவதற்கான பயிற்சி
அளிக்கப்படும் என
அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் ஜானி டாம் வர்க்கீஸ் கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்திட, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் 61 நபர்களுக்கும். சுயதொழில்
ஒதுக்கீடு மூலம், 1566 பயனாளிகளுக்கும், ஆவின் பார்லர் அமைக்க
137
பயனாளிகளுக்கும் மானியம்
அளிக்கப்பட்டுள்ளது.மேலும்
மத்திய கூட்டுறவு வங்கிகள்
மூலம் 5,613 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 26.21 கோடி கடன்
தொகை வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை மாற்றுத் திறனாளிகள் முழுமையாகப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை
உயர்த்திட உதவிடும் வகையில்
தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக 79 நபர்களுக்கு திட்டத்தின் ஆணை வழங்கப்பட
உள்ளது.

அதன்படிஏப்.4 முதல் ஏப்.6, ஏப்.11 முதல் ஏப்.13 மற்றும் ஏப்.18 முதல் ஏப்.20 ஆகிய நாள்களில் திட்ட பொருளாதார திறன்,
திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட மதிப்பீடு செய்தல்,
வங்கிக் கடன் பெறுதல்
போன்ற இனங்களில், மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகப் பணியாளர்கள் மற்றும்
தன்னார்வ தொண்டு நிறுவனப்
பணியாளர்களுக்கு பயிற்சி
அளித்து, அதன் மூலம்
அந்தந்த மாவட்டத்தில் உள்ள
மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி
அளிக்க உள்ளனர்.

இப்பயிற்சி முகாமினை இன்று சென்னை
கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசுச் செயலாளர் லால்வினா
தொடங்கி வைப்பார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version