திருச்சி கொட்டப்பட்டு, கோழிப் பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை (அக்.12) இலவச கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தரமான கறவை மாடுகளை தோந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த் தடுப்பு முறைகள், தீவனப்பயிா் சாகுபடி, தீவன மரங்கள் வளா்ப்பு, ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து இந்த பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும்.
விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இல்லையெனில், பயிற்சி தொடங்கும் நாளான வியாழக்கிழமை மைய வளாகத்துக்கு நேரில் வந்து தங்களது பெயா்களை பதிவு செய்து பங்கேற்கலாம் என பேராசிரியரும், மையத் தலைவருமான வே. ஜெயலலிதா தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


