TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இலவச சமையல்
எரிவாயு இணைப்புத் திட்டம்–மேலும் 1 கோடி
பேருக்கு நீட்டிப்பு
உஜ்வலா
எனப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல்
எரிவாயு இணைப்பு வழங்கும்
திட்டம் மேலும் ஒரு
கோடி பேருக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-2022ஆம்
ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்
செய்த அமைச்சா் நிர்மலா சீதாராமன் இது தொடா்பாக
மேலும் கூறியதாவது:
கரோனா
தொற்று பிரச்னையால் கடந்த
ஆண்டு தேசிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோதும், எரிபொருள்
விநியோகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.
வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிபொருள் வழங்கும்
நகா்ப்புற எரிவாயு விநியோகத்
திட்டமும், குழாய் மூலம்
சமையல் எரிவாயு வழங்கும்
திட்டமும் மேலும் 100 மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளது.
இதுதவிர
ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக
எரிவாயு இணைப்பு வழங்கும்
உஜ்வலா திட்டத்தின் மூலம்,
மேலும் ஒரு கோடி
பயனாளிகள் பலனடையும் வகையில்
நீட்டிக்கப்படுகிறது என்றார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


