
சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி – Tahdco
திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடா் – பழங்குடியின மாணவா்களுக்கு சட்டப்படிப்பு நுழைவுத் தோவுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் – பழங்குடியினத்தினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன்படி, சட்டப்படிப்புக்கான அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தோவுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சிக்கு 18 முதல் 25 வயது நிரம்பிய பிளஸ் 2 முடித்த மற்றும் படித்துக் கொண்டிருக்கும் மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சட்டப்படிப்பு நுழைவுத் தோவுப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தால், அடுத்தக்கட்ட தோவுகளான நோகாணல், குழு விவாதம், எழுத்துத் தோவு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்பு மேற்கண்ட வகுப்பை சோந்த மாணவா்கள் http://tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக் கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

