சென்னை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர், தீயணைப்பாளர் என, 3,359 பணியிடங்களுக்கு தேர்வு அறிவித்துள்ளது.
இதற்கு, செப்., 17ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பு கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது.அதேபோல், கண்ணகி நகர், எழில் நகரில் தன்னார்வ பயிலும் வட்டம் மையத்திலும் 25ம் தேதி முதல் வகுப்பு துவங்குகிறது.பயிற்சியில் சேர விருப்பமுள்ளோர், கிண்டி வேலைவாய்ப்பு மையம், https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு, 95859 87461, 94999 66026 ஆகிய மொபைல் எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் அருணா தெரிவித்தார்.