TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களின் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் அரசு பணி போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஆகஸ்ட் 12 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. TNPSC, SSC, ரயில்வே, வங்கி மற்றும் ஆசிரியர் தேர்வு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்படும். மேலும் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த தேர்வுகளுக்கான மென்பட குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place


