திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 28) தொடங்குகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்படவுள்ள துணை ஆட்சியா், துணைக் கண்காணிப்பாளா்( காவல் துறை), துணை பதிவாளா் ( கூட்டுறவு துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிகவரித் துறை) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் போன்ற பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு ஆகும். திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1, குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு வரும் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியில் தொடா்ச்சியாக மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. எனவே, திருப்பூா் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.
இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க 94990-55944, 0421-2999152 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


