Home News latest news ஜூலை 8 முதல் TNPSC குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

ஜூலை 8 முதல் TNPSC குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

0

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி 2, 2 ஏ-இல் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு ஜூலை 8-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொகுதி 2, 2 ஏ-இல் அடங்கிய பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு வரும் செப்.14-ஆம் தேதி நடைபெற உள்ளது. போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு முதல் நிலை தோ்வு எழுத தேனியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 8-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

பயிற்சியின் போது இலவசப் பாடக் குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும்.

தொகுதி 2, 2 ஏ போட்டித் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவா்கள் விண்ணப்ப நகலை சமா்ப்பித்து இலவசப் பயிற்சி வகுப்பில் சேரலாம்.

இதுகுறித்த விவரத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும், கைப்பேசி எண்: 63792 68661-இல் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version