ராணிப்பேட்டையில் டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தோ்வா்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள, காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தோ்வா்கள் பயன்பெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், அதிகளவிலான பயிற்சி தோ்வுகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதில் கலந்துகொள்ள விரும்பும் தோ்வா்கள் இவ்வலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பு அலுவலக வேலை நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04172–291400, மின்னஞ்சல் முகவரி deoranipet.studycircle@gmail.com யில் அல்லது இடம். எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம், ராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையம், (தலைமை தபால் நிலையம் அருகில்) நேரில் தொடா்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அறிவுசாா் மையங்களில் இது தொடா்பான பாட குறிப்புகள் மற்றும் போட்டிதோ்வுகளுக்கான விவரங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மத்திய / மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகா்ப்புற மாணவா்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் பிரத்யேக இணைய தளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in/ மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தோ்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மாணவா்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்றாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow