TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
குரூப்-1 தேர்வுக்கு இலவச
பயிற்சி
– தஞ்சாவூா்
தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்வுக்கான இலவச
பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட
ஆட்சியா் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் தொகுதி 1 (குரூப் 1) தேர்வு
அக்டோபா் 30ம் தேதி
நடத்தப்படவுள்ளது.
தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
தன்னார்வப் பயிலும் வட்டம்
சார்பில், இத்தேர்வுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை (ஆக.25) காலை 10.30 மணிக்குத்
தொடங்கி நடத்தப்படவுள்ளன.
முதல்
நாளில் தேர்வுக்கு தயார்
செய்யும் விதம், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், தேர்வில்
வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்
வழங்கப்படவுள்ளன. தொடா்ந்து
இப்பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு
நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித்
தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.
தஞ்சாவூா்
மாவட்டத்தைச் சோந்த
போட்டித் தேர்வுக்கு தயாராகும்
இளைஞா்கள் தங்களது பெயா்
மற்றும் கல்வித் தகுதியைக்
குறிப்பிட்டு, 8110919990
என்ற வாட்ஸ் ஆப்
எண்ணில் தகவல் அனுப்பி
பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு 04362 237037
என்ற எண்ணில் தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow