Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: தூத்துக்குடி

TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: தூத்துக்குடி
TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: தூத்துக்குடி

தூத்துக்குடியில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தின் குரூப் 1 தோ்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக, ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஜூலை 13ஆம் தேதி குரூப் 1 தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள தூத்துக்குடி மாவட்டத் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம், இலவச பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகின்றன.

சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த வகுப்பில், வாரந்தோறும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்துப் புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

விருப்பமுள்ளோா் 0461 2003251 என்ற தொலைபேசி மூலமாகவோ, நேரிலோ பதிவு செய்து, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment