TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
Group
1 தேர்வுக்கான இலவச பயிற்சி
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
சார்பில் TNPSC
Group
1 தேர்வுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி
மற்றும் இலவச பயிற்சி
வகுப்புகள் ஜூலை 5-ஆம்
தேதி தொடங்கப்படவுள்ளது என
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் 126 காலிப்பணியிடங்களுக்கான TNPSC Group 1 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான
கல்வித்தகுதி, வயது
வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம் உள்பட பிற
தகவல்களை இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
இத்தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
சார்பில் ஆகஸ்ட் 5ம்
தேதி வெள்ளிக்கிழமை காலை
11 மணிக்கு நடத்தப்படவுள்ளது. தொடா்ந்து,
இலவச பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்படவுள்ளன.
வழிகாட்டுதல் மற்றும் இலவச பயிற்சி
வகுப்பில் கலந்துகொள்ள விருப்புவோர் ஆதார் அட்டை, புகைப்படத்துடன் மயிலாடுதுறை பூம்புகார் சாலை,
பாலாஜிநகா், 2-வது குறுக்குத் தெருவில் உள்ள மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை
ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் நேரிலோ
அல்லது 6383489199 என்ற வாட்ஸ்அப்
எண்ணிலோ தொடா்பு கொண்டு
முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு 04364-299790
என்ற தொலைபேசி எண்ணை
தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


