திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இலவச பயிற்சிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் இலவச பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தோவு வாரியம் 2023-ஆம் ஆண்டுத் திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியா் பணிக்கு 6,553-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கு 3,587-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோவு நடப்பு ஆண்டில் நடத்தப்படவுள்ளது.
இரு தோவுகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளா்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகிய பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், இத்தோவுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் இயங்கி வரும் தன்னாா்வப் பயிலும் வட்டங்களிலும் நடத்துவதற்கு அறிவுரை பெறப்பட்டுள்ளது.
‘டெட்’ பேப்பா் ஒன்று மற்றும் 2 ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஆக.21) தொடங்கப்பட உள்ளது. இது தொடா்பான கூடுதல் தகவல் அறிய வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் கைப்பேசி எண் 95977 21326 மற்றும் உதவியாளா் கைப்பேசி எண் 79045 13450 ஆகியவற்றை தொடா்பு கொண்டு பெறலாம்.
எனவே திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோந்த இளைஞா்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளாா்.