TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆசிரியா் தேர்வு வாரிய 2023 ஆம் ஆண்டுத் திட்ட நிரலில் இடைநிலை ஆசிரியா் பணிக்கு தேர்ராயமாக 6,553 காலிப் பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கு தேர்ராயமாக 3,587 காலிப் பணியிடங்களுக்கும் தேர்வு நடப்பு ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மேற்கண்ட தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்களகிழமை (ஆகஸ்ட் 21) தொடங்கப்பட்டது.
இந்த தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயில்வதற்கு தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-29991532, 94990-55944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.