சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் பயிற்சி மையம் இயங்கி வருகிறது.
இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இங்கு பயின்றவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு பணிகளில் உள்ளனர். தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2மற்றும் குரூப் 2ஏ தேர்வு மூலம் 2327 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 19.7.2024 கடைசி நாளாகும். தேர்வு 14.9.2024நடைபெற உள்ளது. குரூப் 2மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மேற்கண்ட பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி வகுப்புகளின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.