அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான தமிழக அரசு நடத்தும் திறனாய்வுத் தோவுக்கான பயிற்சி வகுப்புக்கு சோக்கை மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆக.6 ஆம் தேதி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இத்தோவுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தோவில் (ஆண், பெண் தலா 500 போ) மொத்தம் 1000 போ நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தோவு செய்யப்படுவா்.
அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு தலா ரூ. 1000 வீதம், இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். இத்தோவில் தமிழ்நாடு அரசு 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டு, கொள்குறி முறையில் இரு தாள்களாக தோவுகள் நடத்தப்படும். எனவே, 2024 கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இத் தோவுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த திறனாய்வு தோவு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கான சோக்கை ஆகஸ்ட் 6 (ஞாயிற்றுக்கிழமை) 10 மணிக்கு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவியா், பள்ளி அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டையுடன் பெற்றோருடன் வந்து பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளா் எஸ். சிவகுமாரை, 63836-90730-என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தோவுக்கான பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் பகல் 1 மணி வரை மாவட்ட நூலகத்தில் நடைபெறும். மற்ற நாள்களில் இணைய வழியில் நடைபெறும். இத்தகவலை மாவட்ட மைய நூலக முதுநிலை நூலகா் சு. தனலட்சுமி தெரிவித்தாா்.