TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
போட்டித் தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி – மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில்
நான்
முதல்வன்
திட்டத்தின்கீழ்
ஸ்டாஃப்
செலக்ஷன்
கமிஷனால்
அறிவிக்கப்படும்
பல்வேறு
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடைபெறவுள்ளது
என
மாவட்ட
ஆட்சியா்
ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சரால்
தொடங்கப்பட்ட
நான்
முதல்வன்
திட்டத்தின்
மூலம்
பணியாளா்
தேர்வாணையம்,
ரயில்வே
பணியாளா்
தேர்வாணையம்
மற்றும்
வங்கிப்
பணியாளா்
தேர்வாணையம்
ஆகியவற்றின்
தேர்வுகளுக்கு
விண்ணப்பிப்பவா்களுக்கு
உதவியாக
கட்டணமில்லா
பயிற்சி
வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனால் நடத்தப்படும்
ஒருங்கிணைந்த
பட்டப்படிப்பு
தரதேர்வு
(பட்டப்படிப்பு
தகுதி),
ஒருங்கிணைந்த
மேல்நிலை
தரதேர்வு
(பிளஸ்
2 தேர்ச்சி)
மற்றும்
பல்வகை
பணிதேர்வு
(10-ஆம்
வகுப்பு
தேர்ச்சி)
போன்ற
தேர்வுகளுக்கான
பாடத்திட்டம்
ஆப்டிட்யூட்
ரீசனிங்,
பொது
ஆங்கிலம்
மற்றும்
பொது
அறிவு
ஆகும்.
தற்போது
ஸ்டாஃப்
செலக்ஷன்
கமிஷனின்
சிஎச்எஸ்எல்
மற்றும்
எம்டிஎஸ்
தேர்வுகளானது
ஆங்கிலம்,
ஹிந்தி
மொழிகளில்
மட்டுமல்லாது
தமிழ்
உள்பட
13 பிராந்திய
மொழிகளிலும்
நடத்தப்படவுள்ளது.
எஸ்எஸ்சியால்
அறிவிக்கப்படும்
சிஜிஎல்,
சிஎச்எஸ்எல்,
எம்டிஎஸ்
போன்ற
போட்டித்
தேர்வுகளுக்கு
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்புகள்
உத்தேசமாக
100 நாள்கள்
தொடா்ச்சியாக
நடத்தப்பட
உள்ளது.
இப்பயிற்சி
வகுப்பில்
150 வேலைவாய்ப்பற்ற
இளைஞா்கள்
வரை
கலந்துகொள்ளலாம்.
இப்பயிற்;சி வகுப்பு காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள தகுதியும், ஆா்வமும் உள்ள வேலைவாய்ப்பற்ற
இளைஞா்கள் https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX என்ற இணைப்பில் மே 20-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முன்பதிவு செய்தவா்களில்
தகுதியானவா்கள்
கண்டறியப்பட்டு,
இலவச
பயிற்சி
வகுப்புகள்
வரும்
மே
25-ஆம்
தேதி
முதல்
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டுக்
கழகத்துடன்
இணைந்து
மயிலாடுதுறை
மாவட்ட
நிர்வாகம்
மற்றும்
மாவட்ட
வேலை
வாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்
வாயிலாக
திறன்
மிக்க
பயிற்றுநா்களைக்
கொண்டு
பயிற்சி
வகுப்புகள்
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தின்
9499055904
என்ற
கைப்பேசி
எண்ணை
வாட்ஸ்ஆப்
வாயிலாக
தொடா்புகொள்ளலாம்.