Sunday, August 10, 2025
HomeBlogமயிலாடுதுறையில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடக்கம்

மயிலாடுதுறையில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடக்கம்

TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்

மயிலாடுதுறையில்
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
தொடக்கம்

மயிலாடுதுறையில்
புதன்கிழமை
தொடங்கிய
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பில்
சேர்ந்து
பயன்பெறலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
இரா.
லலிதா
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பணியாளா் தேர்வு வாரியத்தால் (SSC) ஒருங்கிணைந்த
பட்டப்படிப்பு
தர
(
சிஜிஎல்)
தேர்வு
மூலம்
மத்திய
அரசின்
பல்வேறு
துறைகளில்
காலியாகவுள்ள
குரூப்
பி
மற்றும்
குரூப்
சி
பணியிடங்களான
உதவியாளா்,
வருமான
வரித்
துறை
ஆய்வாளா்,
இளநிலை
புள்ளியல்
அலுவலா்,
தணிக்கையாளா்,
அஞ்சலக
உதவியாளா்,
கணக்காளா்,
உதவி
அமலாக்க
அலுவலா்,
உதவி
தணிக்கை
அலுவலா்,
உதவி
கணக்கு
அலுவலா்
உள்ளிட்ட
35
வகையான
20,000
க்கும்
மேற்பட்ட
காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன.
இப்பணியிடங்களுக்கு
ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பில்
தேர்ச்சி
பெற்றவா்கள்
மற்றும்
கல்லூரி
இளங்கலை
இறுதியாண்டு
பயிலும்
மாணவா்கள்
விண்ணப்பிக்கலாம்.

8.10.2022க்குள் இத்தேர்வுக்கு
தேவையான
கல்வித்
தகுதியில்
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
தேர்வுக்கான
வயது
வரம்பு
18
முதல்
30
வரை.

இதர பிற்படுத்தப்பட்ட
பிரிவினருக்கு
3
ஆண்டுகளும்,
பட்டியல்
பிரிவினா்
மற்றும்
பட்டியல்
பழங்குடியினருக்கு
5
ஆண்டுகளும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
10
ஆண்டுகளும்
உச்சபட்ச
வயது
வரம்பில்
தளா்வு
உண்டு.
இத்தேர்வுக்கு
அக்.8ம் தேதிக்குள் https://ssc.nic.in/ எனும் தேர்வு வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.100. எனினும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினா், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு
விண்ணப்பக்
கட்டணம்
இல்லை.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறிவழிகாட்டும்
மையத்தின்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
வாயிலாக
மேற்கண்ட
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்
பெயா்,
முகவரி,
வாட்ஸ்ஆப் கைப்பேசி எண் மற்றும் கல்வித் தகுதியை குறிப்பிட்டு
6383489199
என்ற
கைப்பேசி
எண்ணுக்கு
வாட்ஸ்
ஆப்
மூலமாகவோ
அல்லது
04364 299790
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்புகொண்டு
முன்
பதிவு
செய்து
கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு,
மயிலாடுதுறை,
பாலாஜி
நகா்,
பூம்புகார்
சாலை
2
வது
குறுக்குத்
தெருவில்
செயல்பட்டு
வரும்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
நேரில்
அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments