TAMIL MIXER EDUCATION.ன்
வங்கி பணி செய்திகள்
வங்கி பணியாளர்
தேர்வுக்கு இலவச பயிற்சி
கோவை: வங்கி பணியாளர்
தேர்வாணைய தேர்வுக்கு, கோவை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
சார்பில் இலவச பயிற்சி
அளிக்கப்படுகிறது.வங்கி
பணியாளர் தேர்வாணையம் கிளார்க்
பணி காலியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டில், 6,035 காலியிடங்கள் பூர்த்தி
செய்யப்பட உள்ளன.அனைத்து
பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இதன் முதல்
நிலைத்தேர்வு August 28, September 3 மற்றும்
September 4ம்
தேதிகளில் நடத்தப்படும்.
முதன்மைத் தேர்வு தகுதியான
விண்ணப்பதாரர்களுக்கு August 8ல் நடத்தப்படும்.
இதற்கான
கல்வித்தகுதி, பட்டப்படிப்பு முடித்திருப்பதுடன், கணினி
செயல்பாடுகளில் சான்றிதழ்,
டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 20 முதல்
28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு, மாவட்ட
வேலைவாய்ப்பு மையம்
வாயிலாக, இலவச பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இதற்கான
அறிமுக வகுப்பு வரும்
20ம் தேதி காலை,
11.00 மணிக்கு வேலைவாய்ப்பகத்தில் நடக்கிறது.
மனுதாரர்கள், வங்கி தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவம், தங்களது
போட்டோவுடன் கலந்து கொள்ளலாம்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும்
21ம் தேதி கடைசி
நாள்.
https://www.ibps.in/ என்ற
இணையதளம் மூலம் மட்டுமே
விண்ணப்பிக்க முடியும்.
இத்தேர்வுக்கான பாடக்குறிப்புகள், வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறையின் இணையதளத்தில் உள்ளன.
போட்டித் தேர்வு எழுதி,
அரசு வேலைவாய்ப்பு பெற
விரும்புவோர், இந்த
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here