TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு – கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு ஆலவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வழியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப்-4, காவலா் தோ்வுகள், ஆசிரியா் தகுதித் தோ்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, குரூப் 1 முதல் நிலை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வார நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஸ்மாா்ட் போா்ட், அதிவேக இணையம், பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீா் புத்தகங்கள் உள்ளிட்டவை அடங்கிய நூலக வசதியும் உள்ளது.
இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது புகைப்படம், ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன் 18/63 நேப்பால் சாலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04151–295422 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow