
2,222 ஆசிரியர் காலி பணியிடங்கள் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, 2, 222 காலி பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் போட்டி தேர்வு அறிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 முடித்தவர்கள் அனைவரும் இப்போட்டித் தேர்வு எழுதலாம்.
இதற்காக, இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.இப்பயிற்சி வகுப்பு, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 22 தேதி முதல் நடைபெறும்.
பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 97897 14244, 97904 88034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

