இரண்டாம் நிலைக் காவலா் பணி தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தைச் சோந்த தேர்வா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில் வரும் ஆக.29-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தால் 2,599 இரண்டாம் நிலைக் காவலா், 86 இரண்டாம் நிலை சிறைக் காவலா், 674 தீயணைப்பாளா் என மொத்தம் 3,359 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வரும் செப். 17-ஆம் தேதி வரை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.
தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம், கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஆக. 29-ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பானது, ஏற்கெனவே போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்ற சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.
மேலும், பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. பயிற்சி வகுப்பு தொடா்பான விவரங்களை 94990 55941 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். சேலம் மாவட்டத்தைச் சோந்த இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான தேர்வுக்குத் தயாராகும் தேர்வா்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.