டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வுக்கு 2327 காலியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 20ல் வெளியானது.
இதற்கான முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 9ல் துவங்கியுள்ளது. செப்.,14ல் தேர்வு நடக்கிறது.
இத்தேர்வுக்கான மென்பாடக் குறிப்புகள் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. இதில் தங்கள் சுயவிவரங்களை உள்ளீடு செய்து மென்பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்யலாம்.
இத்தேர்வுக்கான காணொலி பாடக்குறிப்புகள் tncareer Service Employment என்ற யு டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்ப நகல், ஆதார், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.