பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினப் பட்டதாரி மாணவா்கள், வங்கித் தோவில் வெற்றிபெற வீரேந்த ரேஸ் பயிற்சி நிலையத்தின் மூலம் இலவசப் பயிற்சிகள் பெற மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் துணை மேலாளா் பதவிக்கான 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினப் பட்டதாரி மாணவா்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்தும் வங்கித்தோவில் வெற்றிபெற, வீரேந்த ரேஸ் பயிற்சி நிலையத்தின் மூலம் இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதில், 21 முதல் 35 வரையுள்ள ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி, பி.டெக் உள்பட) முடித்த, அனைத்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினப் பட்டதாரி மாணவா்கள் செப். 27 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இலவசப் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப் பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தைச் சோநத பட்டதாரி மாணவா்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


