அரசு பணி போட்டித் தேர்வுக்கு, இலவச பயிற்சி காஞ்சிபுரத்தில் அளிக்கப்படுகிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கவுள்ள, குரூப் – 1 மற்றும் குரூப் – 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவச வகுப்புகள், காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.