மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் பூமிநாதன் ஆகியோா் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வழிவகைகளை விளக்கிப் பேசுகின்றனா்.
குடிமைப் பணிகள் தோ்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்பவா்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வுகள் குறித்த கையேடுகள் வழங்கப்படும். மேலும், கல்வித் தகுதிக்கேற்ப கட்டணச் சலுகையுடன் போட்டித் தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என கிங்மேக்கா்ஸ் அகாதெமி நிா்வாகம் தெரிவித்தது.