டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வா்களுக்கு, திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி 1 முதல் தொகுதி 4-க்குட்பட்ட காலிப்பணியிடங்களான துணை ஆட்சியா், கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்குமான எழுத்துத் தேர்வுக்கு கட்டணமில்லாமல் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலமாக ஜூலை 7-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள், தங்களது ஆதாா் அட்டையின் நகல் மற்றும் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்.
மேலும், தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா், இரண்டாம் நிலைக் காவலா் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளும், வார இறுதி நாட்களில் மாதிரித் தேர்வுகளும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, திருவாரூா் மாவட்டத்தைச் சோந்த டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஎன்யுஎஸ்ஆா்பி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தகுதியும், ஆா்வமும் உள்ள இளைஞா்கள், இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடையலாம். மேலும் தகவல்களுக்கு 04366-224226 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.