விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் 20 முதல் கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரையும், மாலை 7:00 மணியில் இருந்து 9:00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதை போட்டித்தேர்வு படிக்கும் மாணவர்கள் பயன்படுத்தி பயனடையலாம், என்றார்.