இலவச கண்புரை
அறுவை சிகிச்சை – வரும்
8ல் மருத்துவ முகாம்
காஞ்சிபுரத்தில், இலவச கண்புரை அறுவை
சிகிச்சைக்கான மருத்துவ
பரிசோதனை முகாம், வரும்
8ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கண்சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:
காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி லயன்ஸ்
சங்கம், ஆனந்தா டிரேடர்ஸ்
அரிசி மண்டி மற்றும்
சென்னை அரவிந்த் கண்
மருத்துவமனை சார்பில், காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் உள்ள
மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மே 8ம்
தேதி காலை 10.00 மணிக்கு
இலவச கண்புரை அறுவை
சிகிச்சைக்கான மருத்துவ
பரிசோதனை முகாம் நடக்கிறது.
இதில்,
சென்னை அரவிந்த் கண்
மருத்துவமனையை சேர்ந்த
கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய
உள்ளனர்.
முகாமில்,
கண்புரை நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு
செய்யப்பட்டு, சென்னை
அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலவசமாக,
விழிலென்ஸ் பொருத்தி, அறுவை
சிகிச்சை செய்யப்பட உள்ளது.
முகாமில்
பங்கேற்க விரும்புவோர், 97914 08768, 97516
11431 என்ற மொபைல் எண்களில்
முன்பதிவு செய்யலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


