HomeBlogஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிஏ பயிற்சி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிஏ பயிற்சி

அரசுப் பள்ளி
மாணவர்களுக்கு இலவச
சிஏ பயிற்சி

இந்திய
பட்டய கணக்காளர்கள் வாரியம்
பட்டயக் கணக்கறிஞர்கள் தொழிலை
வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான நிறுவனம் ஆகும். பட்டயக்
கணக்காளராக விரும்பும் நபர்கள்
வாரியம் நடத்தும் தகுதி
தேர்வில் கட்டாயம் தேர்ச்சி
பெற வேண்டும். தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மத்திய
அரசிடம் இருந்து சான்றிதழ்
வழங்கப்படும். இவர்கள்
மத்திய அரசால் பதிவு
செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள்.

தென்னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்:

சிஏ
தேர்வுக்கு தென்னிந்திய பட்டயக்
கணக்காளர் நிறுவனம் சார்பில்
பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நவம்பர்
மாத சிஏ தேர்வுக்கு ஜூன் 9 முதல் தொடங்கி
அக்டோபர் 10ம் தேதி
வரை நடக்க உள்ளது.
தினமும் 5 மணி நேரம்
இணையதள வழியில் பயிற்சி
வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

இதற்காக
ரூ.9,500 கட்டணமாகும். ஆனால்
தமிழக அரசின் பள்ளி
மற்றும் அரசு உதவு
பெறும் பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் மற்றும் கொரோனா
தொற்றினால் பெற்றோரை இழந்த
மாணவர்களுக்கு கட்டணமின்றி இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள்
http://www.sirc-icai.org/view-batches.php
என்ற இணையதளத்தில் பதிவு
செய்ய வேண்டும். இது
தொடர்பான கூடுதல் தகவல்களை
அறிய விரும்பினால் 7358506400,
8220522669, 9677126011
என்ற தொலைபேசியில் தெரிந்து
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular