மதுரை மணிநகரம் ‘இஸ்கான்’ அமைப்பு சார்பில் 18 நாள் ‘பகவத் கீதை அமுதம்’ ஆன்லைன் தொடர் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
ஜூலை 1 முதல் தினமும் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை வகுப்பு நடைபெற உள்ளது. 14 வயதுக்கு மேற்பட்டோர் முன்பதிவு (iskconmadurai.com) செய்து பங்கேற்கலாம். 72172 16001ல் முன் பதிவு செய்யலாம்.பகவத்கீதையின் 18 அத்தியாயங்களும் எளிமையான தமிழில் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். வகுப்பின் முடிவில் சந்தேகங்களுக்கு பதில் வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழ் உண்டு. ஏற்பாடுகளை இஸ்கான் மண்டல செயலாளர் சங்கதாரிபிரபு செய்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


