மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நாளை (செப்.17) காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.மதுரை எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குநர் உமா சந்திரிகா கூறியதாவது: குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் ‘விஸ்வகர்மா’ திட்ட தொடக்கவிழா நாளை (செப்.,17) நடக்கிறது.
இத்திட்டம் குறித்து பிரதமர் மோடி தெரிவிப்பார். மத்திய அரசின் நீர்சக்தி அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
தச்சர், படகு தயாரிப்பாளர், படைக்கல வினைஞர், கொல்லர், சுத்தி கருவிப் பெட்டி, பூட்டு தயாரிப்பவர், சிற்பி, பொற்கொல்லர், குயவர், காலணிக் கைவினைஞர், கூடை பாய் துடைப்பம் தயாரிப்பவர், கயிறு நெசவாளர், பாரம்பரிய பொம்மை தயாரிப்பவர், நாவிதர், மாலை கட்டுபவர், சலவைத் தொழிலாளி, தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர்கள் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும் 500 பேருக்கு இலவச அனுமதி, மதிய உணவு உண்டு, என்றார். தொடர்புக்கு 0452 – 291 8313.தில் பங்கேற்க இலவச அனுமதி