Sunday, August 10, 2025
HomeBlogஇலவச ஓவியப் பயிற்சி

இலவச ஓவியப் பயிற்சி

இலவச ஓவியப் பயிற்சி

இலவச ஓவியப் பயிற்சி

மதுரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்து கலை சேவைகளில் வெற்றி வாகை சூடி பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார் மதுரை அய்யர்பங்களா ஓவிய கலைஞர் விக்னேஷ் அறிவுச் செல்வம்.

விக்னேஷ் அறிவுச் செல்வம் கூறியதாவது:

7ம் வகுப்பில் இருந்தே ஓவியத்தில் தீராத காதல் இருந்தது. அதற்கு பின் மதுரை ஓவிய மாஸ்டர் சண்முக சுந்தரத்திடம் முறைப்படி கற்றேன். நான் கற்ற ஓவிய கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க பயிற்சியாளராக களமிறங்கினேன். துாரிகை ஓவியம், ஆயில் பெயின்ட், ஆர்ட் பிரம் வேஸ்ட், சோப் கார்விங், மியூரல் சிலைகள் என பலவித கைவினை கலை பொருட்களை செய்கிறேன்.
இதை செய்வது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். இரண்டு வயது முதல் வயது வித்யாசமின்றி அனைவருக்கும் ஓவியம், கைவினை பொருட்கள் செய்ய கற்று தருவதோடு அரசு பள்ளி, வசதியில்லாத மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியும் தருகிறேன். சமீபத்தில் என் மாணவர்கள் 50 பேர் வீட்டில் இருந்தபடி ஒரே நேரத்தில் பாரதியார் ஓவியம் வரைந்து இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸில் இடம் பிடித்தனர்.

என் கலை சேவைக்காக தேசத்தின் சிற்பி உள்ளிட்ட 15 விருதுகள் கிடைத்தன. மாணவர்களிடம் ஓவிய திறமை வளர்த்து சிறந்த ஓவிய கலைஞர்களாக உருவாக்குவதே என் லட்சியம் என்றார்.

தொடர்புக்கு: 70924 39807

        RELATED ARTICLES

        LEAVE A REPLY

        Please enter your comment!
        Please enter your name here

        - Advertisment -

        Most Popular

        Recent Comments