புதிய பரிமாணத்தில் மோசடி – எச்சரிக்கும் காவல்துறை
சென்னை
பெருநகர காவல்துறை, தொலைபேசி
மோசடி அழைப்புகளில் இருந்து
பொதுமக்கள் தங்களை பாத்துகாத்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி,
மோசடி
நபர்கள் தொலைபேசி மூலம்
ஓ.டி.பி.பெறுவது,
ஏ.டி.எம்.
கார்டு விவரங்கள் கேட்பது
போன்ற நிலைகளை தாண்டி
பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும்
காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கேஸ்
மானியம் உங்கள் வங்கி
கணக்கிற்கு வரும்,போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது மொபைல்
எண்ணை மாற்றி கொடுத்து
விட்டேன் என்று அழைப்பது.,
பான் கார்டு மற்றும்
கே.ஒய்.சி
இணைக்கவில்லை என்றால்
வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வரும் எஸ்.எம்.எஸ்
, அமேசானில் பகுதி நேர
வேலை, கிரிப்டோ வணிகம்
போன்று வாட்ஸ் ஆப்
மற்றும் டெலிகிராமில் வரும்
செய்திகளை நம்பி பணம்
தரக்கூடாது.
ஓ.எல்.எக்ஸ்
போன்ற செயலிகளில் பொருட்களை
விற்கும் போது, க்யூ.ஆர்
கோடை ஸ்கேன் செய்யச்
சொன்னால் அதனைத் தவிர்க்க
வேண்டும்.
கடன்
செயலிகள் மூலம் கடன்
வாங்க வேண்டாம் என்று
காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.