HomeBlogரேஷன் கடை பணியிடங்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும்

ரேஷன் கடை பணியிடங்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும்

ரேஷன் கடை பணியிடங்களுக்கு,
வேலை வாய்ப்பு அலுவலகம்
மூலம் நிரப்பப்படும்

ரேஷன்
கடைகளில் காலியாக உள்ள
பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம்
மூலம் நிரப்பப்படும் என்று
கூட்டுறவுத்துறை அமைச்சர்
.பெரியசாமி அறிவித்தார்.

தமிழக
சட்டப்பேரவையில் நேற்று
கூட்டுறவு துறை மானியக்
கோரிக்கை மீதான விவாதத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர்
பெரியசாமி பதிலளித்து பின்பு
புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

நியாய
விலை கடைகளில் காலியாக
உள்ள 3331 விற்பனையாளர்கள் 666 கட்டுநர்கள் காலி பணியிடங்களுக்கு ஏற்கனவே
வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்து 1988ஆம்
ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு
சங்கத்தின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
மூலம் பட்டியல் பெற்றும்
பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மூலம்
நேரடி கொள்முதல் விற்பனை
நிலையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்டா
மாவட்டங்களை தவிர்த்து பிற
மாவட்டங்களில் நேரடி
கொள்முதல் நிலையங்களை அமைக்க
மாவட்ட கலெக்டர் தலைமையில்
குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை
19
மாவட்டங்களில் 68 அரசு
நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேளாண்மை கூட்டுறவு
கடன் சங்கங்கள் மூலம்
ஆரம்பிக்கப்படவுள்ளன. இது
மேலும் விரிவுபடுத்தப்படும் என
கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular