Join Whatsapp Group

Join Telegram Group

சோளம் அறுவடைக்கு, வாடகை இயந்திரம் – விவசாயிகளுக்கு அழைப்பு

By admin

Updated on:

சோளம் அறுவடைக்கு, வாடகை இயந்திரம்விவசாயிகளுக்கு அழைப்பு

குறைந்த
செலவில், சோளப்பயிர் அறுவடையை
முடிக்க, அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்தலாம், என
வேளாண் பொறியியல் துறை
அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மானாவாரி
சாகுபடியில், சோளம் அதிகம்
பயிரிடப்படுகிறது.

குறைவான
செலவில், தீவனம் தயாரிக்க,
சோளம் சாகுபடியை தேர்வு
செய்கின்றனர். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவத்தில், கனமழை பெய்ததால், மானாவாரி
சோளப்பயிர், வழக்கத்தைவிட உயரமாக
வளர்ந்துள்ளது. தை
மாதத்தில் இருந்து அறுவடையை
துவக்க, விவசாயிகள் தயாராகிவருகின்றனர்.

வேலை
உறுதி திட்ட பணிகளால்,
விவசாய தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. விவசாயிகளின் இக்கட்டான
நிலையை போக்க, வேளாண்
பொறியியல் துறை சார்பில்,
சோளத்தட்டு அறுவடை இயந்திரம்
வாடகைக்கு வழங்கும் திட்டம்
மீண்டும் துவங்கியுள்ளது.’டிராக்டரில்பொருத்திய, அறுவடை இயந்திரம்
மூலம், ஒரு ஏக்கர்
சோளப்பயிரை, ஒன்றரை மணி
நேரத்தில் அறுவடை செய்ய
முடியுமென, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண்
பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மணிக்கு, 400 ரூபாய்
வாடகையில், சோளப்பயிர் அறுவடை
இயந்திரத்தை பயன்படுத்தலாம்.திருப்பூர் கோட்டத்தில் இரண்டு, தாராபுரம்,
உடுமலையில், தலா ஒரு
இயந்திரமும் உள்ளது. சோளப்பயிர் அறுவடை செய்ய வேண்டிய
விவசாயிகள், அந்தந்த உதவி
பொறியாளர் அலுவலகத்தில், பதிவு
செய்து, எளிய முறையில்
அறுவடை செய்யலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]