HomeNewslatest news🎯 மீனவச் சமூக இளைஞர்களுக்கு IAS/IPS FREE Coaching – ஆண்டுதோறும் 20 பேருக்கு அரசு...

🎯 மீனவச் சமூக இளைஞர்களுக்கு IAS/IPS FREE Coaching – ஆண்டுதோறும் 20 பேருக்கு அரசு வழங்கும் சிறப்பு வாய்ப்பு! (Last Date: 25.11.2025)

மீனவச் சமூகத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு IAS, IPS போன்ற இந்தியாவின் உயரிய குடிமைப்பணிகளுக்குச் செல்ல தமிழக அரசு வழங்கும் மிகப் பெரிய வாய்ப்பு! 🎯🔥
ஆண்டு தோறும் 20 கடல் & உள்நாட்டு மீனவ இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை AICSCC (All India Civil Services Coaching Centre) மூலம் முழுக்க இலவசமாக UPSC Special Coaching வழங்கப்படுகிறது.

இது மீனவ இளைஞர்களின் வாழ்க்கையே மாற்றக்கூடிய Golden Opportunity bro!

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

⚡ Quick Info – முக்கிய தகவல்கள்

  • 🏛 பயிற்சி மையம்: All India Civil Services Coaching Centre, Chennai (AICSCC)
  • 🧑‍🎓 யார் பயன் பெறலாம்?: மீனவ கூட்டுறவு சங்கம் / மீனவர் நல வாரியம் உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரிகள்
  • 🎓 பயிற்சி: UPSC Civil Services (IAS/IPS) – Prelims + Mains + Interview
  • 👥 தேர்வு பெறுபவர்கள்: வருடத்திற்கு 20 பேர்
  • 📃 விண்ணப்பம்: FREE – Government guidelines + application form available
  • 🗓 கடைசி தேதி: 25.11.2025, மாலை 5:00 மணி
  • 📍 விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய இடம்: சீர்காழி AD Fisheries Office
  • தொலைபேசி எண்: 04364-271455

📝 Full Details – மீனவ இளைஞர்களுக்கான UPSC FREE Coaching Scheme

2017 நவம்பர் 12-ஆம் தேதி சட்டப்பேரவையில் மீன்வளம், நிதி & பணியாளர் துறை அமைச்சர் அறிவித்த அரசு திட்டத்தின் கீழ், மீனவச் சமூக இளைஞர்களை உயரிய குடிமைப் பணிகளில் சேர்க்க வழி செய்யுவதற்காக இந்த Special Coaching Programme தொடங்கப்பட்டது.

இந்தப் பயிற்சி:

  • IAS
  • IPS
  • IFS
  • IRS
  • மற்றும் பல UPSC All India Services

போன்ற குடிமைப் பணிகளுக்கான முழுமையான Prelims + Mains + Interview coaching-ஐ உள்ளடக்கியது.

தமிழ்நாட்டில் UPSC aspirants-க்கு மிக உயர்தர coaching வழங்கும் Chennai AICSCC-ல் இந்த பயிற்சி நடைபெறுவதால், இது ஒரு life-changing opportunity.


🎯 Eligibility – யார் விண்ணப்பிக்கலாம்?

✔ கடல் அல்லது உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வாரிசு
✔ மீனவர் நல வாரியம் உறுப்பினர்களின் வாரிசு
பட்டதாரி (Any Degree)
✔ குடிமைப்பணி தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்

(கல்வித் தகுதி: minimum Degree completion required)


📄 விண்ணப்பப் படிவம் & வழிகாட்டு நெறிமுறைகள்

விண்ணப்பப் படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines) இலவசமாக கீழ்க்கண்ட அலுவலகங்களில் கிடைக்கும்:

📌 விண்ணப்பம் பெறும் இடங்கள்

1️⃣ நாகப்பட்டினம் – மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகம்
2️⃣ மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி – உதவி இயக்குநர் அலுவலகம்

👉 வேலை நாட்களில் (Working Days) நேரில் சென்று FREE-ஆ பெற்றுக்கொள்ளலாம்.


📮 விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் + தேவையான ஆவணங்களுடன்:

உதவி இயக்குநர் அலுவலகம்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
தென்பாதி மெயின் ரோடு, எண்: 41/யு
பெஸ்ட் பள்ளி எதிரில்
சீர்காழி – 609111

Phone: 04364-271455

➡ பதிவு அஞ்சல் (Registered Post) மூலமாக
அல்லது
➡ நேரடியாக அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்


⏳ கடைசி தேதி

🗓 25.11.2025 (மாலை 5:00 மணி வரை)

Deadline strictly follow செய்யாவிட்டால் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.


🎓 இந்த UPSC இலவச பயிற்சியின் நன்மைகள்

  • IAS/IPS நிலை coaching – completely FREE
  • சென்னை AICSCC experienced faculty
  • Standard Books + Study Materials Free
  • Daily Tests & Answer Writing
  • Hostel/Library facilities (as per centre rules)
  • Personality Development + Interview Training
  • வெற்றி பெற guidance from experts

இந்த training குறைந்த பொருளாதார நிலை கொண்ட மீனவ குடும்பங்களுக்கு government-level UPSC coaching கிடைக்க செய்யும் மிகப்பெரிய திட்டம்.


🗣 மாவட்ட நிர்வாகம் கூறுவது

மீனவச் சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்த golden opportunity-யை பயன்படுத்தி, UPSC தேர்வில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!