TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
மானியத் திட்டங்களில்
பயன் பெற மீனவா்கள் விண்ணப்பிக்கலாம்
– நாகை
இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில்
உள்நாட்டு
மீன்
உற்பத்தியைப்
பெருக்கவும்,
மீன்
வளா்ப்போரை
ஊக்குவித்திடும்
விதமாக
250 முதல் 1000 சதுரமீட்டா் அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட
கிப்ட்
திலேப்பியா
மீன்
வளா்ப்பை
மேற்கொள்ள
ஏதுவாக
மீன்
குஞ்சு,
மீன்
தீவனம்
உரங்கள்
மற்றும்
மீன்
வளா்ப்புக்கான
உள்ளீட்டுப்
பொருள்கள்,
பண்ணைப்
பொருள்கள்,
பறவை
தடுப்பு
வசதிகள்
ஆகிய
மீன்
வளா்ப்புக்காக
ஆகும்
செலவுத்தொகை
ரூ.
36 ஆயிரத்தில்
50% ரூ.18
ஆயிரம்
பின்னேற்பு
மானியமாக
வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம்:
மீனவா்களின் வாழ்வாதாரத்தை
மேம்பாடுத்த
பிரதான்
மந்திரி
மீன்வள
மேம்பாட்டுத்
திட்டத்தின்கீழ்
புதிய
மீன்
வளா்ப்புக்
குளங்கள்
அமைத்தல்,
நன்னீா்
மீன்வளா்ப்புக்
குளங்களுக்கு
உள்ளீட்டு
மானியம்
வழங்குதல்,
புதிய
மீன்
குஞ்சுகள்
வளா்ப்புக்கு
குளங்கள்
அமைத்தல்,
சிறிய
அளவிலான
பயோபிளாக்
குளங்களில்
மீன்
வளா்த்தலுக்கான
மானியம்
வழங்கும்
திட்டம்,
குளிர்
காப்பிடப்பட்ட
4 சக்கர
வாகனத்
திட்டம்,
குளிரூட்டப்பட்ட
4 சக்கர
வாகனத்
திட்டம்
ஆகியவை
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இத்திட்டங்களுக்கு
பொதுப்பிரிவினருக்கு
40%, பெண்கள்
மற்றும்
ஆதிதிராவிடா்களுக்கு
60% மானியம்
வழங்கப்படுகிறது.
எனவே, மேற்படி திட்டங்களில்
பயன்பெற
நாகை
மாவட்ட
ஆட்சியா்அலுவலக
வளாகத்தில்
இயங்கும்
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்துறை
உதவி
இயக்குநா்
அலுவலகத்தைத்
தொடா்பு
கொண்டு
விண்ணப்பங்களைப்
பெற்று
பயன்பெறலாம்.
மூப்பு
அடிப்படையில்
முன்னுரிமை
அளித்து
தேர்வு
செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow