TAMIL MIXER EDUCATION.ன்
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்
மீன் வளா்ப்பு
உள்ளீட்டு பொருள்கள் மானியத்தில் வாங்க விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-2023ம்
ஆண்டிற்கு தமிழ்நாடு மீன்வளம்
– மீனவா் நலன் மற்றும்
கால்நடை பராமரிப்புத் துறை
அமைச்சரால் அறிவிக்கப்பட்ட பல்நோக்கு
பண்ணைக்குட்டைகளில் மீன்
வளா்ப்பை ஊக்குவிக்க மாவட்ட
மீன் வளா்ப்போர்மேம்பாட்டு முகமை
உறுப்பினா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் 250 முதல் 1000 சதுர மீட்டா்
அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக்
குட்டைகளில் மீன் வளா்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள்
ஆகிய மீன் வளா்ப்பிற்கான உள்ளீட்டு பொருள்கள், பண்ணை
பொருள்கள் மற்றும் பறவை
தடுப்பு வசதிகள் ஆகிய
மீன் வளா்ப்பிற்கான ஒரு
அலகிற்கு ஆகும் செலவினமாக
ரூ.36,000 இல் 50 சதவீதம்
மானியமாக ஒரு பண்ணைக்
குட்டைக்கு ரூ. 18 ஆயிரம்
மானியமாக வழங்கப்படுகிறது.
எனவே,
இந்ததிட்டத்தில் பயன்பெற
மாவட்ட மீன் வளா்ப்போர்மேம்பாட்டு முகமை உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம். மீன்
வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் கிருஷ்ணகிரி மீன் வளம் மற்றும்
மீனவா் நலத் துறை
உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று,
உரிய ஆவணங்களுடன் ஆக.18ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிக விண்ணப்பங்கள் பெறப்படின் முன்னுரிமை மற்றும் தகுதியின்
அடிப்படையில் பயனாளிகள்
தோவு செய்யப்படுவார்கள்.
மேலும்
விவரங்களுக்கு மீன்
வள உதவி இயக்குநா்
அலுவலகம், கதவு எண்
24-25, 4வது குறுக்கு தெரு,
கோ–ஆப்ரேட்டிவ் காலனி,
கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here